சர்வதேச குழந்தைகள் தினவிழா

திருப்போரூர்: குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு சார்பில் சர்வதேச குழந்தைகள் தினவிழா திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் அசோகன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் சிசுக்கொலை தடுத்தல், குழந்தை திருமணம் தவிர்த்தல், பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்தல், வளர் இளம்பெண்கள் திறன் வளர்ப்பு மேம்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி பேசினார். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்பிரபு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் சைல்டு லைன் மற்றும் 1098 அவசர உதவி எண் ஆகியவற்றின் பணிகள் குறித்து பேசினார்.

Related Stories:

More
>