குலசை முத்தாரம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

உடன்குடி: உலக அளவில் பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 6ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் நாளை மறுதினம் (14ம்தேதி) வரை பக்தர்கள் தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், வேடமணிந்த பக்தர்கள் யாரும் கோயில் வளாகம் பகுதியில் வர அனுமதி கிடையாது. நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். வேடம் அணிந்த பக்தர்கள்  வளாகத்தில் வெளியே நின்றவாறு தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories:

More
>