வேலூர் சார் பதிவாளர் ஆபீசில் ரெய்டு பதிவுத்துறை ஐஜிக்கு விஜிலென்ஸ் அறிக்கை

வேலூர்: வேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, இணை சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை பதிவுத்துறை ஐஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த 30ம் தேதி மாலை 4.40 மணிக்கு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு 12.30 மணி வரை சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் கழிவறை, கோப்புகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், வேலூர் இணை சார்பதிவாளர் வனிதா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பணம் பறிமுதல் மற்றும் வழக்கு சம்பந்தமான விரிவான அறிக்கை பதிவுத்துறை ஐஜி சிவன்அருளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேலூர் விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இணை சார்பதிவாளர் வனிதா மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: