சட்டீஸ்கருக்கு தினமும் 29,500 மெட்ரிக்டன் நிலக்கரி: எஸ்இசிஎல் ஒப்புதல்

ராய்பூர்: நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு நிலக்கரிசுரங்க தொழிற்சாலை சட்டீஸ்கர் மாநிலத்துக்கு தினமும் 29,500 ெமட்ரிக் டன் நிலக்கரி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அம்பிகா பிரசாத் பாண்டே கூறியதாவது: சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கோரிக்கையை ஏற்று சட்டீஸ்கர் மாநிலத்துக்கு நிலக்கரி வினியோகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். தினமும் 29,500 ெமட்ரிக் டன் தரமான நிலக்கரி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>