இலங்கை மாகாண சபை தேர்தலை முன்கூட்டியே நடத்த முடியாது

கொழும்பு: இலங்கையில்  மாகாண சபை தேர்லை நடத்துவதற்கு இரண்டு மாற்று திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவு செயலர் சிரிங்லா, சிறுபான்மை தமிழ் கட்சிகளுடனான சந்திப்புக்கு பின்னர், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த அறிவுறுத்தினார். ஆனால் முன்கூட்டிய தேர்தல் நடத்த முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே தேர்வு குழுவிடம் கூறுகையில், ``வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பழைய விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பான புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

More
>