வடமாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஒன்றிய அமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை

புதுடெல்லி: நாட்டின் மொத்த மின் வினியோகத்தில் 70 சதவீதத்தை உற்பத்தி செய்யும் 135 நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகளில், பாதிக்கும் மேலான ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. உலக சந்தையில் நிலக்கரியின் விலை உயர்வு, போதிய வினியோகம் இல்லாதது, கொரோனா தொற்றினால் நிலக்கரி உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் உற்பத்தி ஆலைகளில் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வடமாநிலங்களான குஜராத், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மின்சாரத் துறை, நிலக்கரித் துறை அமைச்சர்கள் ஆர்கே. சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நிலக்கரி கையிருப்பு, மின் தட்டுபாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுப்பயணம்

* உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவாவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தை நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.

* வரும் 15 முதல் 17ம் தேதி வரை அந்தமான் செல்லும் அவர் `ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ எனும் 75 ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வையொட்டி அங்குள்ள சிறையை பார்வையிட உள்ளார்.

* அக்டோபர் 23-25ம் தேதி காஷ்மீர் செல்லும் அவருடன் 70 ஒன்றிய அமைச்சர்களும் உடன் செல்கின்றனர்.  

* அக்.30ம் தேதி உத்தரகாண்ட் செல்லும் அமைச்சர் அமித் ஷா மாநில கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

More
>