×

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் பங்கேற்பு

திருவள்ளுர்: ஆரணி அடுத்த காரணி கிராமத்தை சேர்ந்த கவுதமன் ஆணவ படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நாயனார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் சித்தார்த்தன், ஒரகடம் குமணன், கவுரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், பாலசிங்கம், எழில் கரோலின், சுந்தர், கவுதமன் கோபு, நெடுஞ்செழியன், நீலமேகம், கதிர்நிலவன், திராவிடமணி, இளவரசு, அருண் கவுதம், செந்தில், சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, `தாத்தா இறப்புக்கு சென்ற கவுதமன் இயற்கை மரணம் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

இதனை காவல் துறை தற்கொலை என மூடி மறைத்து வருகிறது. காவல்துறையினரின் உயர் அதிகாரிகளிடம் பேசியதையடுத்து கவுதமின் தந்தை மற்றும் அண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது கணவர் கவுதமன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என அவரது மனைவி அமுலு தெரிவிப்பதால் இதனை கொலை வழக்காக மாற்ற வேண்டும்,’ என்றார்.
இதில் தமிழ்ச்செல்வன், நேரு, செழியன், ஏகாம்பரம், குமார், புருஷோத், திருவரசு, செந்தில், பூண்டி ராஜா, எட்டி, சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் முத்தமிழன் நன்றி கூறினார்.

Tags : Visika ,Thirumavalavan , Visika protest: Thirumavalavan participation
× RELATED குடியுரிமைத் திருத்தச் சட்டம்...