சீமான் வடசென்னைக்கு வந்தால் வெட்டுவேன்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேச்சால் பரபரப்பு

சென்னை: வடசென்னைக்கு சீமான் வந்தால் வெட்டுவேன் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த படுகொலையை கண்டித்தும், அதற்கு காரணமான ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை தபால் நிலையம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் மவுன போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் கூறியதாவது: ஏய்.. சீமானே, உனக்கு தான் நாக்கு இருக்குனு பேசாத.

நாங்க பேச ஆரம்பிச்சா தாங்க மாட்ட. உன் குலம், கோத்ரம் என்ன.. நீ எங்க தலைவர், தலைவியை பத்தி பேசுறியா. வடசென்னைக்கு வந்து பார். உன்னைய வெட்டாம விட மாட்டேன். நான் திருநெல்வேலிக்காரன். அருவாளோட வந்துருக்கேன். மோதி பாக்றியா.. வடசென்னைல எங்கயாவது நிகழ்ச்சி நடத்து, எங்கள் தொண்டர்கள் கொன்னுருவாங்க. காங்கிரஸ்காரனை இளிச்சவாயன்னு நெனச்சியா. பேசணும்னு நெனச்சா கமல்ஹாசன்ட்ட போய் பேசு. அது உன் தரம். சரத்குமார்ட்ட போய் பேசு. அது உன் தரம். காங்கிரஸ்காரன பேச உனக்கு என்ன தகுதி இருக்கு. திருநெல்வேலிக்கு போனா நாடார், மதுரைக்கு வந்தா தேவர், பட்டுக்கோட்டைக்கு போனா செட்டியார்னு சொல்லிட்டு திரியிற உனக்கு ஏதாவது இருக்கா. கடைசியா சொல்றேன். இப்பிடியே பேசீட்டு இருந்த.. சீமான் உன் நாக்கை அறுத்துருவேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>