×

மும்பை தொழிலதிபரிடம் பல கோடி மோசடி: தலைமறைவான வங்கதேச வாலிபர் கைது

சென்னை: மும்பை தொழிலதிபரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு ஓராண்டாக தலைமறைவான வங்கதேசத்தை சேர்ந்தவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைதுசெய்தனர். சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு ஜெட்டாவில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வங்கதேசத்தை சேர்ந்த முகமது முஸ்கின் (28) என்பவர் தொழில் விசாவில் வந்திருந்தார். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது, விசாரணை நடத்தினர். அதில், மும்பையை சேர்ந்த ஒரு இந்திய தொழிலதிபரிடம் தொழில் ரீதியாக கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துவிட்டு முகமது முஸ்கின் தலைமறைவாகி விட்டார்.  அவரை தலைமறைவு குற்றவாளியாக மும்பை போலீசார் அறிவித்தனர். மேலும் அனைத்து சர்வதேச விமான நிலையத்துக்கும் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. தற்போது தொழில் தொடர்பாக இந்தியா வந்தபோது சென்னையில் முகமது முஸ்கின் சிக்கி உள்ளார். உடனடியாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மும்பை போலீசுக்கு தெரிவித்தனர்.  இதையடுத்து மும்பை போலீஸ் தனிப்படையினர் சென்னைக்கு விரைந்துள்ளனர்.


Tags : Mumbai , Multi-crore scam against Mumbai businessman: Undercover Bangladeshi youth arrested
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...