வரும் 16ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை:பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறும். நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பாமகவின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.இதில் பங்கேற்பதற்கான இணையதள முகவரி, கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியே அனுப்பப்படும்.

Related Stories:

More
>