பாலக்காடு ரயில் நிலையத்தில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்

பாலக்காடு: பாலக்காடு ரயில் நிலையத்தில் 9.5 கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பாலக்காடு ரயில்வே ஸ்டேஷசனில் கலால்துறை இன்ஸ்பெக்டர் சந்தோஷ், ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ஷஜி அகஸ்டீன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலக்காடு ரயில் நிலையத்திற்குள் வந்த பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதில், பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பேக்கில் மறைத்து வைத்திருந்த 9.5 கிலோ கஞ்சா பொட்டலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் பயணிகளிடம் விசாரணை செய்ததில் தங்களுடையதல்லா என கூறி விட்டனர். தற்போது, ரயில் மார்க்கமாக அதிகளவில் கஞ்சா கடத்தல் நடந்து வருகிறது. கஞ்சா கடத்தல் கும்பலைப்பிடிப்பதற்கு சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வருகின்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

More
>