ராஜீவ், சோனியா குறித்து அவதூறு பேச்சு: சீமானை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் காங். கட்சியினர் மனு

கோவை: ராஜீவ் மற்றும் சோனியாகாந்தியை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரசார் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதுகுறித்து மயூரா ஜெயக்குமார் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்தும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார்.

பெண் தலைவர் பற்றிய அவரது பேச்சு பெண்களை அவமதிப்பது போன்றதாகும். அவரது இந்த பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இதுகுறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சீமானை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>