×

குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது. எந்த சூழ்நிலையிலும் அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது : ஐகோர்ட் நீதிபதி கருத்து!!

சென்னை : தமிழ்நாட்டில் குழந்தைகள் காப்பகங்களின் நிலை, வசதிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் அறக்கட்டளையில் அனுமதியின்றி குழந்தைகள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் குழந்தைகள் அறக்கட்டளையை மூட கடந்த 2015ம் ஆண்டு வட்டாட்சியர் உத்தரவிட்டார்.வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி வில்லிவாக்கம் அறக்கட்டளை சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் கூடாது என்று கருத்து தெரிவித்தனர்.குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது. எந்த சூழ்நிலையிலும் அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் குழந்தைகள் காப்பகங்களின் நிலை, வசதிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனிடையே காப்பகத்தில் குழந்தைகள் யாரும் இல்லை என திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


Tags : ICC , குழந்தைகள் , பாதுகாப்பு ,சமரசம் ,ஐகோர்ட், நீதிபதி
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...