காஞ்சியில் தொடர் மழை: நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள் தஞ்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள சிறிய ஏரிகள் நிரம்பி வழிகிறது. தற்போது அறுவடை முடித்து மீண்டும் பயிர் பருவம் துவங்கியுள்ளதால் நிலங்களில் விவசாயிகள் ஏர் உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர். பறவைகள், நிலங்களில் உள்ள மண்புழு, நெல்மணிகள் உள்ளிட்டவைகளை உட்கொள்ள வரும் நிலையில், ஏரிகளில் உள்ள அடர்ந்த மரங்களில் மாலை நேரங்களில் அதிகளவு பறவைகள் தஞ்சமடைகிறது.

இவைகள் எழுப்பும் ஒலி, கிராம மக்களுக்கு இனிமையாகவும் அதேநேரம் தங்கள் கிராமம் மற்றொரு வேடந்தாங்கலாக மாறி விட்டதோ என்ற மகிழ்ச்சிலும் திளைக்கின்றனர். அதிகாலையில் இரை தேட புறப்படும் இந்த பறவைகள் எழுப்பும் ஓசைகள் அதிகாலையில் எழுந்து விவசாய வேலைகளை பார்க்க பெரிதும் உதவுகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>