×

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து மேலும் 500 கன அடி தண்ணீர் திறப்பு: 29 கிராம மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: மழை நீர்வரத்து காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால், கொசஸ்தலை ஆறு செல்லும் 29 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டரால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கமாகும். 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

மொத்த உயரம் 35 அடி. இதில் 3,231 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கலாம். மேலும் பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாயில் வெள்ள நீர், பருவமழையினால் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரும் என 1600 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதுபோன்ற காரணங்களால் நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், வெள்ளநீர் வரத்தினை வினாடிக்கு 1000 கன அடி வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனடிப்படையில் உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகல் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நீர் திறப்புக்கு முன்னதாக குறிப்பிட்ட நேரத்தில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. இதையடுத்து 3 மற்றும் 13 ஆகிய மதகுகள் வழியாக வினாடிக்கு தலா 500 கனஅடி நீர் வீதம் வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறந்து விடப்பட்டது.

இன்றைய நிலவரப்படி அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 1453 கன அடியாக வந்து கொண்டுள்ளது. இதனால் 34.05 அடி உயரமும், 2839 மில்லியன் கன அடி கொள்ளவாகவும் நீர் உயர்ந்துள்ளது. விரைவில் அணைக்கு வரும் நீர் வரத்து 34.5 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்று காலை 6.30 மணியளவில் 3 மற்றும் 13 மதகுகள் வழியாக வினாடிக்கு மேலும் 500 கனஅடி நீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறந்து விடப்பட்டது.

இதனால் இரு அணைகளிலும் மொத்தம் 1500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், ஏரியின் நீர்வரத்தை கண்காணிக்கும் வகையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொசஸ்தலையாற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Burundi , Another 500 cubic feet of water released from Boondi Reservoir: Warning to 29 villagers
× RELATED பூண்டி ஒன்றியத்தில் திமுக தெருமுனை கூட்டம்