×

தேசிய அளவில் உரிமம் பெற்று இருந்தாலும் தமிழகத்திற்குள் இயங்கும் சுற்றுலா பேருந்துகளுக்கு மாநில வரி கட்டாயம் : ஐகோர்ட் தீர்ப்பு!!

சென்னை : வெளிமாநில பதிவு பெற்ற சுற்றுலா பேருந்துகளை இனி தமிழகத்திற்குள் இயக்கும்போது கண்டிப்பாக மாநில வரி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கோவைக்கு இயக்கிய போது, கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சுற்றுலா பேருந்தை முடக்கினார்.பேருந்து முடக்கத்தை நீக்க வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு தனியார் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  விசாரித்து வந்தார். அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சுற்றுலா வாகனங்கள் “அகில இந்திய அளவில் உரிமம்” பெற்று இருந்தாலும் கூட தமிழகத்தில்  இயக்கும்போது  கண்டிப்பாக மாநில வரி செலுத்த வேண்டும். மாநில அரசின் சிறப்பு அதிகாரம் என்பதால் வரி விதிப்பதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. மாநில அரசுகள் விதிக்கும் சிறப்பு அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள முடியாது, என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,iCourt , தமிழகம் ,சுற்றுலா ,பேருந்து, மாநில வரி, கட்டாயம்
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...