×

குளித்தலை அருகே பலத்த மழையால் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் இரண்டாக பிளந்து வீடுகளில் விழுந்தது

குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்புபலத்த மழை பெய்தது. இந்நிலையில் குளித்தலை ஒன்றியம் வைகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு மயிலாடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் ஒன்று இரண்டாக பிளந்து வேருடன் சாய்ந்தது. அவ்வாறு சாய்ந்த புளியமரம் அப்பகுதியிலுள்ள துரைசாமி மற்றும் பிரேமா என்பவருக்கு சொந்தமான 2 ஓட்டு வீடுகளின் மேல் சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த துரைசாமி மற்றும் அவரது மகள் ஸ்வேதா ஆகியோரின் மீது ஓடு விழுந்ததில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும் இவரது வீட்டின் அருகே கூரைக் கொட்டகை நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர மோட்டார் வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு சென்றனர். வீடுகளின் மேல் விழுந்த புளிய மரத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



Tags : Kulithalai , Kulithalai: Heavy rains lashed Kulithalai and surrounding villages in Karur district for the past two days.
× RELATED குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்