மணப்பாறை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் மழைநீர்-அகற்ற இந்திய கம்யூ. கோரிக்கை

மணப்பாறை : மணப்பாறை ரயில்வே பால சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மணப்பாறையின் பிரதான நுழைவு வாயில் பகுதிகளான திருச்சி ரோடு மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதிகளில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் சுரங்கப் பாதைகளில், தற்போது பெய்து வரும் மழையினால் இரண்டு சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் இப்பகுதியிலிருந்து துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. இப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: