×

பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் அக். 25ம் தேதி தொடங்கும்.. பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு காலி இடங்களே இருக்காது : அமைச்சர் பொன்முடி

சென்னை : பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் 25ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடுதான் பின்பற்றப்பட்டு வருகிறது.அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.முதல் 2 சுற்றுகளிலேயே கடந்த ஆண்டை விட 10,000 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர்.கடந்த ஆண்டு முதல் 2 சுற்றில் 21,000 மாணவர்கள் சேர்ந்திருந்தார். அடுத்ததாக 3வது, 4 வது சுற்று நடைபெற உள்ளதால் மேலும் பல மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவர்.

பயோடெக்னாலஜி படிப்பிற்கு நிதி ஒதுக்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுத உள்ளார்.  பயோடெக்னாலஜி படிப்பில் இந்த ஆண்டு 69% இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் பயோடெக்னாலிஜி படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டு 500 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.பொறியியல் கல்லூரிகளில் தொழில் சார்ந்த படிப்பாக அனைத்து பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படும்.7.5% இட ஒதுக்கீடு மூலம் இதுவரை 5,970 அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் அக் 25ம் தேதி தொடங்கும்,என்றார்.


Tags : Minister ,Ponmudi , பொறியியல் , கல்லூரி,அமைச்சர் பொன்முடி
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...