அல் அக்சா மசூதி அருகே முஸ்லீம்களின் கல்லறைகளை இடித்து தள்ளியது இஸ்ரேல் : போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு!!

ஜெருசலேம் : கிழக்கு ஜெருசலேமில் முஸ்லீம்களின் புனித தலமான அல் அக்சா மசூதி அருகே அவர்களின் கல்லறைகளை இஸ்ரேல் இடித்து தள்ளியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் அல் அக்சா மசூதிக்கு அருகே உள்ள Al-Yusufiye கல்லறை தோட்டத்தில் உள்ள முஸ்லீம்களின் கல்லறைகளை திடீர் என்று இடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. புல்டவுசர்களை கொண்டு கல்லறைகளை இஸ்ரேல் இடித்து தள்ளியதால் அவற்றில் இருந்து சிதிலமடைந்த உடல்களின் எலும்புகள் வெளியே தென்பட்டன.

அவற்றை பாலஸ்தீனியர்கள் ஒவ்வொன்றாக சேகரித்தனர்.சிறிது நேரத்தில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் அங்கு திரண்டுவிட போராட்டம் வெடித்தது. அவர்களை நோக்கி இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பாலஸ்தீனியர்கள் காயம் அடைந்தனர்.தொடர்ந்து அங்கே பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மெக்கா, மிதுனாவுக்கு அடுத்தபடியாக நபிகள் நாயகம் விண்ணுலக பயணத்தை தொடங்கிய இடமாக கருதப்படும் அல் அஃசாவை 3வது புனித தளமாக கருதும் முஸ்லீம்கள் இஸ்ரேலின் அத்துமீறலை கடுமையாக எதிர்ப்பதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

Related Stories: