வாடகைத் தாய் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விரும்புகிறார்கள் : கர்நாடக பாஜக அமைச்சர் சுதாகர் சர்ச்சை பேச்சு!!

பெங்களூரு : நவீன காலத்து இந்திய பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குவதாகவும் தனித்து வாழவே விரும்புவதாகவும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெங்களுருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் பேசிய அவர், வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற பெண்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் இந்தியர்களிடம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் இது நல்லதிற்கே இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது, இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலான பெண்கள் தனித்து வாழ்வே விரும்புகின்றனர் என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன்.திருமணம் செய்துக் கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.நம் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இது நல்ல தல்ல,என்று கூறினார். கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பேசி இருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

Related Stories:

More
>