×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 21,563 பேர் டிஸ்சார்ஜ், 193 பேர் பலி

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3,39,71,607 ஆக உயர்ந்தது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 18,132 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,71,607 ஆக உயர்ந்தது.

* புதிதாக 193 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,50,782 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,563 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,93,478 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,27,347 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 95,19,84,373 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* நேற்று ஒரு நாள் மட்டும் 46,57,679 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India , India, Corona, Discharge, Kills
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!