×

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் பிராடு

லண்டன்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இங்கிலாந்து அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் டிச.8ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜோ ரூட் தலைமையிலான அணியில் மொத்தம் 17 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால், இந்த தொடரில் பங்கேற்பது குறித்து முன்னணி வீரர்கள் தயக்கம் காட்டி வந்த நிலையில் முழு பலம் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பேர்ஸ்டோ, டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸாக் கிராவ்லி, ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்ட்டன், ஆலிவர் போப், ஆலிவர் ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Tags : Ashes ,Brad ,England , Ashes Test series: Brad on the England squad
× RELATED காட்டுத்தீயில் மரங்கள் சாம்பல்