×

பிஎன்பி பாரிபா ஓபன் 3வது சுற்றில் பிளிஸ்கோவா: முகுருசா வெளியேற்றம்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். 2வது சுற்றில் போலந்தின் மெக்டலெனா பிரெக்குடன் (106வது ரேங்க்) மோதிய பிளிஸ்கோவா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் பிளிஸ்கோவா முதல்நிலை வீராங்கனையாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு 2வது சுற்றில் ஸ்பெயின் நட்சத்திரம் கார்பினி முகுருசா 3-6, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அய்லா டாம்யானவிச்சிடம் போராடி தோற்றார்.

முன்னணி வீராங்கனைகள் மரியா சாக்கரி (கிரீஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கேதரினா சினியகோவா (செக்.) ஆகியோரும் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர். கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு, டாரியா கசட்கினா (ரஷ்யா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.), கோகோ காப், டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), அனெட் கோன்டாவெ ய்ட் (எஸ்டோனியா), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா) ஆகியோர் 3வது சுற்று க்கு தகுதி பெற்றுள்ளனர்.

* மெட்வதேவ் முன்னேற்றம்
இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை வீழ்த்து 3வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்கள் ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), டீகோ ஷ்வார்ட்ஸ்மன் (அர்ஜென்டினா) ஆகியோரும் 3வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

Tags : Bliskova ,BNP Bariba Open ,Muguruza , Bliskova in the 3rd round of the BNP Bariba Open: Muguruza elimination
× RELATED டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: அனெட், முகுருசா வெற்றி