×

உலகளவில் 80% பள்ளிகள் திறப்பு

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றால் உலகளவில் 19 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைனில் பல பள்ளிகள் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், உலகளவில் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை, உலக வங்கி மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து உலக அளவில் ஆய்வு மேற்கொண்டது. இந்த அறிக்கையை உலக கல்வி மீட்பு பதிவினர் வெளியிட்டுள்ளனர். அதில், ‘உலகளவில் 200 நாடுகளில் 80 சதவீத பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதில் 54%பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு நேரிடையாக வந்து பாடம் நடத்துகின்றனர். 34 சதவீத பள்ளிகளில் நேரிடை வகுப்பு, ஆன்லைன் வகுப்பு இரண்டும் கலந்து நடந்து வருகின்றன.

10 சதவீத பள்ளிகளில் எப்போதாவது வகுப்பு நடக்கிறது. 2 சதவீத பள்ளிகளில் எந்த வகுப்பும் நடக்கவில்லை,’ என்று தெரியவந்துள்ளது. உலக வங்கி கல்வி அணியினரின் ஆய்வில், 53 சதவீத நாடுகளில் உள்ள பள்ளிகள் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று முக்கியத்துவம் அளிக்கின்றனர். பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும். முககவசம், சமூக இடைவெளி, காற்றோட்டம் ஆகியவற்றை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : 80% of schools worldwide are open
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...