×

இந்தியா-சீனா 13ம் கட்ட பேச்சு

புதுடெல்லி: இந்தியா-சீனா இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 13வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கடந்தாண்டு இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன் காரணமாக எல்லையில் இருநாட்டு ராணுவங்களும் வீரர்களை குவித்தன. இதனால், போர் பதற்றம் உருவான நிலையில் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண்பது என இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. இதனை தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடுகள் எட்டப்பட்ட இடங்களில் இருந்து இருநாடுகளும் வீரர்களை திரும்ப பெற்று வருகின்றன.

இதுவரை 12 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. 12வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜூலை 31ம் தேதி நடைபெற்றது. பின்னர், பாங்காங் சோ,  கோக்ரா பகுதிகளில் இருந்து படைகள் விலக்கி கொள்ளப்பட்டன. இந்நிலையில், இந்திய - சீன ராணுவத்தினர் இடையே 13வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன எல்லையில் உள்ள மோல்டாவில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. லெப்டினென்ட் ஜெனரல் பிஜிகே மேனன் தலைமையிலான இந்திய ராணுவ அதிகாரிகள், சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உத்தரகாண்டின் பராஹோடி பகுதி, அருணாசலப் பிரதேசத்தில் தவாங் எல்லையில் சீன ராணுவம் சமீபத்தில் அத்துமீற முயன்றது. இது தொடர்பாகவும் இதில் பேசப்பட்டதாக தெரிகிறது.

Tags : India ,China , India-China 13th Phase Talks
× RELATED சொல்லிட்டாங்க…