செங்கல்பட்டு, திருப்போரூரில் அரசு கல்லூரி, பள்ளி மாணவர் விடுதியில் அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு அரசு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், மாணவியர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அவர்,விடுதியில் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் முறையான சாப்பாடு வழங்கப்படுகிறதா, பாதுகாப்பு வசதி மற்றும்  அத்தியாவசிய வசதிகள் போதுமானதாக உள்ளதா என விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம்கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள இந்த விடுதியில், தண்ணீர் சரிவர வருவதில்லை, கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. போதுமான கழிப்பறை, குளியலறை இல்லை.

ஒதுக்குப்புறமான இடத்தில் விடுதி அமைந்துள்ளதால் பாதுகாப்பு வசதி வழங்க வேண்டும் என மாணவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும், மாணவர்கள் பள்ளி,கல்லூரி விடுமுறை நாட்களில் வெளியில் செல்ல,  மாணவர்களிடம் முறையான கடிதத்தை பெற்றுக்கொண்ட பிறகுதான் வெளியில் அனுப்ப வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், மாணவர்களது பெற்றோர்களுடைய பெயர், முழுவிலாசம் மற்றும் செல்போன் உள்பட முழு விவரங்களையும் பதிவு செய்து வைக்க வேண்டுமென, விடுதி காப்பாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மாணவர் விடுதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று பயனடையவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories:

More
>