வாக்கு எண்ணும் மையங்களில் 2 ஆயிரம் போலீஸார் குவிப்பு: எஸ்.பி.விஜயக்குமார் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் ஊராட்சி பகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு பெட்டிகள் மதுராந்தகம், அச்சரபாக்கம், மாமல்லபுரம், பவுஞ்சூர்,மல்ரோசாபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.விஜயகுமார் கூறுகையில், ‘‘வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24மணி நேரமும் கண்காணிப்பு கேமரா போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.ஒவ்வொரு வாக்கு பெட்டி மையங்களிலும் ஒரு டிஸ்பிஇரண்டு இன்ஸ்பெக்டர்கள் 200போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் செல்வதற்கு தனி வழியும், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் செல்வதற்கு தனி வழியும் வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மாவட்டத்தில் வன்முறைகள் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்டம் முழுவதும் ரோந்து போலீசார் செக்போஸ்ட்டுகளை கண்காணிப்பர்.’’ என்றார்.

Related Stories:

More
>