காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் உணவு திருவிழா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த கிழம்பியுள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உணவுத் திருவிழா நடைபெற்றது கல்லூரியின் நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் தாளாளர் அரங்கநாதன், தலைவர் த.கே.வீரராகவன், செயலாளர் வி.மோகனரங்கம், பொருளாளர் எம்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இயக்குனர்கள் மாதவன், மதன், சாய்ராம் கல்லூரியின் முதல்வர் முனைவர்.கு.வெங்கடேசன், துணைமுதல்வர் முனைவர்.ம.பிரகாஷ் மற்றும் கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாந்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இச்சிறப்பு உணவுத் திருவிழாவில் உடலுக்கு நலன்பயக்ககூடிய பாரம்பரிய உணவுகள், மருத்துவகுணமுள்ள மூலிகையின் மூலம் தாயார்செய்யப்பட்ட உணவுகள், நோய்எதிர்ப்பு கொண்ட சக்தியளிக்ககூடிய உணவு வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உணவு செய்முறையையும் நன்மைகள் பற்றியும் மாணவர்கள் விளக்கமளித்ததுடன் அனைவருக்கும் சாப்பிடவும் வழங்கப்பட்டது. இந்த அம்ப்ரோசியா - 2021 உணவு திருவிழாவினை உயிர்வேதியியல் துறை பேராசிரியர்கள் புண்ணியக்கோட்டி, சுஜாதா, பாலு, ஆறுமுகம், சித்திரிக்கா, ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த உணவுத் திருவிழாவில் சிறப்பாக உணவு செய்திருந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Stories: