சந்திரவிலாசபுரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

பள்ளிப்பட்டு: சந்திரவிலாசபுரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின்பேரில், ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சந்திரவிலாசபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அங்குள்ள மலையடிவாரத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

இதில், மாவட்ட வன அலுவலர் ராம்மோகன் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது, 50க்கும் மேற்பட்ட வகைகளில் மரக்கன்றுகள் நடும் பணியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மரக்கன்றுகளுக்கு தண்ணீர் தட்டுப்பட்டை தவிர்க்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சு குட்டைகள் அமைத்து  ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தெரிவித்தனர்.

Related Stories:

More