×

பருவநிலை மாற்றம் காரணமாக 3 கோடி ஆண்டுக்கு முன்னரே 65% உயிரின‌ங்கள் அழிவு: புதிய ஆய்வில் தகவல்

துபாய்: பருவநிலை மாற்றம் என்பது தற்கால பிரச்னை அல்ல. பூமி உருவான காலத்திலிருந்தே பெரிய அளவிலான‌ பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக உயிரினங்களும் அழிவுக்கும் மாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளன. பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் இருந்து 65 சதவீதம் பாலூட்டி இனங்கள் அழிந்தது என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
உலகில் அழிந்து போன உயிரினங்கள் குறித்து பல்லாண்டு காலமாக  ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் எகிப்தின் ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய இந்த குழு, பாலூட்டி குழுக்களின் புதைபடிவங்களை  ஆய்வு செய்தனர். இதில் ஹைனோடோண்ட்ஸ் என்று அழைக்கப்படும் அழிந்துபோன மாமிச உண்ணிகள், செதில் வால் அணில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும்  மனிதக் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். புதை படிவங்களாக கிடைத்த பாலூட்டிகளின் பற்கள் ஆய்வுக்கு வெகுவாக‌ உதவியது. அதன் மூலம் அவை எதை உணவாக உட்கொண்டது என்பது பற்றியும் எந்தமாதிரியான உணவு என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக காலத்திற்கு ஏற்ப எலிகள் மாறுதலடைந்து அவற்றின் பற்களிலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளது.


இயோசீன் மற்றும் ஒலிகோசீன் என்று அழைக்கப்படும் புவியியல் காலங்களுக்கு இடையில் சுமார் 3 கோடி ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் உலகின் மிக பெரிய அளவில் பாலூட்டி இனங்கள் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில்  பூமி கடும் குளிர்ச்சியடைந்தது பனிப்படலங்கள் விரிவடைந்தன, கடல் மட்டம் குறைந்தது, உயர்ந்த மரங்கள் அடங்கிய‌ காடுகள் அழிந்தது, கார்பன் டை ஆக்சைடு மிக அரிதான ஒன்றாகி விட்டது. அச்சமயத்தில் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உயிர் இனங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அழிந்துவிட்டன.

ஆப்பிரிக்க பாலூட்டிகள் சில உயிர் தப்பியிருந்தது. 65 சதவீத பாலூட்டி இனங்கள் அழிந்துள்ளன. இந்த‌ ஆய்வின் இணை ஆசிரியர் ஹெஷாம் சல்லம் கூறுகையில், ‘‘முந்தைய  காலநிலை மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் தற்போதைய காலத்திற்கு மிக முக்கியமானதாகும். இதன் மூலம் தற்போதைய‌ காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் அமைப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி எளிதாக அறிய முடியும். இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்’’ என்றார்.

Tags : 65% of species became extinct 3 million years ago due to climate change: new study
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...