ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 40 லட்சம் டோஸ் ஏற்றுமதி: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு கடந்த ஏப்ரலில் அவசரகால பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. தற்போது இது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், ஒரு டோஸ் மட்டுமே போடக்கூடிய ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்னும் அனுமதி அளிக்கவில்ைல. இருப்பினும், இதன் 3ம் கட்ட பரிசோதனைக்கு சமீபத்தில் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த தடுப்பூசியின் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவின் மருந்து நிறுவனமான ஹெட்டிரோ பயோபார்மா நிறுவனமானது, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 40 லட்சம் டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாஷேவ், இந்திய நிறுவனமான ஹெட்டிரோ பயோபார்மா நிறுவனம் தயாரிக்கும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை தனது நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி இருந்தார். இந்த நிறுவனம் ஏற்கனவே 10 லட்சம் ஸ்புட்னிக் வி, 20 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.

Related Stories:

More
>