ஹெல்மெட் போடாமல் ஓட்டியதாக ஆட்டோ டிரைவருக்கு ரூ.800 அபராதம் விதிப்பு: தஞ்சை போலீஸ் அனுப்பிய எஸ்எம்எஸ்

பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதிய பஸ் நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர் நீலகண்டமூர்த்தி. இவரது செல்போனுக்கு தஞ்சாவூர் டிராபிக் போலீசில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், நீங்கள் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.100 அபராதமும், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கியதற்காக ரூ.700 என ரூ.800 அபராதம் கட்ட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்டு நீலகண்டமூர்த்தி அதிர்ச்சியடைந்தார். அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி வரை எனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் உள்ளது. ஆட்டோ நம்பரை குறித்து வைத்து அபராதம் விதித்துள்ளனர். இதுபற்றி பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபீசில் விசாரித்த போது உங்களது கணக்கில் ரூ.800 அபராதம் ஏறியுள்ளது. எப்சி எடுக்கும்போது அதை கட்டவேண்டும் என்றனர். இதுபற்றி மாவட்ட காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றார்.

Related Stories:

More