லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்புணர்வு வார விழா முன்னிட்டு பதிவுத்துறை அதிகாரிகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆலோசனை

சென்னை: பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அக்டோபர் 27ல் ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் மண்டல டிஐஜிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். பத்திரப்பதிவுத்துறையின் மூலம் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதை தவிர்த்து திருமண பதிவு, சீட்டு, சங்க பதிவுகளுக்காக பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகின்றனர். பொதுமக்களோடு நெருங்கிய தொடர்புள்ளது பதிவுத்துறை, இதனால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். எனவே, லஞ்சம் போன்ற புகார்களை தவிர்க்க பதிவுத்துறையில் ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டது. எனினும் பல்வேறு காரணங்களினால் பொதுமக்கள் அதிகாரிகளை சந்திக்கும்போதுதான் பணம் கைமாறுகிறது. மேலும், தற்போது பத்திரப்பதிவுத்துறையில் நேரடியாக பணம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் கைப்பற்றப்படும் அனைத்து பணங்களும் லஞ்ச பணமாக தான் பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் கந்தசாமி வரும் அக்டேபார் 27ம் தேதி சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஏஐஜிக்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டியது என்ன என்பது தொடர்பாகவும், நிர்வாக அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் கணக்கு வைத்திருப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கவிருக்கிறார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் மண்டல டிஐஜிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்புணர்வு வார விழா நடக்கிறது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் முறையாக கணக்கு வைப்பது தொடர்பாக அனைத்து துறை ஊழிர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வரும் அக்டோபர் 27ம் தேதி பதிவுத்துறை ஊழியர்களுடன் ஜூம் மீட்டிங் வழியாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பேசுகிறார். இதற்கான கூட்டத்தில் கலந்து கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories:

More
>