வங்கி அதிகாரி வீட்டில் 30 சவரன் கொள்ளை

சென்னை: சாலிகிராமம், காந்தி நகர், வால்மீகி தெருவை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (72). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவர், தனது மனைவி சீதாவின் 30 சவரன் நகைகளை பீரோவில் வைத்திருந்தார். கடந்த வாரம் நவராத்திரி கொலு பூஜையின்போது, சீதா தனது நகைகளை எடுத்து அணிவதற்கு பீரோவை திறந்து பார்த்துபோது, நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் எந்த பூட்டும் உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து வெங்கட சுப்பிரமணியன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, வெங்கட சுப்பிரமணியன் வீட்டின் வேலைக்கார பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>