×

கப்பலில் போதை பார்ட்டி வழக்கில் பாஜக நிர்வாகியின் மைத்துனர் விடுவிப்பு ஏன்?: மகாராஷ்டிரா அமைச்சர் கேள்வி

மும்பை: மும்பை கப்பல் போதை பார்ட்டி வழக்கில் பாஜக தலைவரின் மைத்துனரை விடுவித்தது ஏன்? என்று அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆரியகான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் பிடியில் சிக்கிய பாஜக தலைவர் மோஹித் கம்போஜின் மைத்துனர் ரிஷப் சச்தேவை, அதிகாரிகள் விடுவித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், ‘மும்பை பாஜக கட்சியின் இளைஞரணி முன்னாள் தலைவராக இருப்பவர் மோஹித் கம்போஜ். இவரது மைத்துனர் ரிஷப் சச்தேவ், கைதான ஆரிய  கான் மற்றும் பிறருடன் வரும் புகைப்படத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டனர்.

ஆனால், அவரை போலீசார் கைது செய்யவில்லை. இதேபோல், மூன்று பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விடுவித்துள்ளனர். அவர்களின் பெயர்கள் விரைவில் வெளியே வரும’ என்றார். முன்னதாக, போதை பார்ட்டி வழக்கு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாலிவுட்  நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இம்தியாஸ் மீது குற்றம்  சாட்டப்பட்டது குற்றம்சாட்டப்பட்டது. நேற்றைய ரெய்டின் போது, ஆர்யன் கானி டிரைவர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : BJaka ,Administrator ,Maharashtra , BJP executive, Maharashtra minister, question
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில்...