பல்வேறு ஆப்களை பயன்படுத்தி நடிகர் போல் போட்டோவை மாற்றி பெண்களை வீழ்த்தி மெகா மோசடி: சென்னை ஐடி ஆசாமி கைது

திருவனந்தபுரம்: வாட்ஸ் அப், பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் இளம் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர்களது போட்டோ மற்றும் வீடியோக்களை வாங்கி, பின்னர் மிரட்டி நகை, பணம் பறித்த சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கடைக்காவூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். கடந்த 10 நாட்களுக்கு முன்பு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பேஸ்புக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஜெரி (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் நாங்கள் மிகவும் நெருக்கமானோம். அதன்படி போட்டோ, வீடியோக்களை பகிர்ந்து கொண்டோம். இந்த நிலையில் ஜெரி, எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக கூறி பணம் கேட்டு மிரட்டினார். அந்த வகையில் ஒரு லட்சம் பணம், 10 பவுன் நகையை மோசடி செய்து பறித்து உள்ளார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்தனர். அதில், சம்பந்தப்பட்ட வாலிபர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரூக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து வாலிரை கைது செய்தனர். விசரணையில் வாலிபர் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கேரளாவில் இதுபோல பல இளம்பெண்களை மிரட்டி பணம், நகைகளை சுரேஷ்குமார் பறித்தது தெரியவந்தது. இதற்காக தன்னுடைய போட்ேடாவை பில்டர் உள்பட பல செயலிகள் மூலம் சினிமா நடிகர் போல அழகாக மாற்றி உள்ளார். இந்த போட்டோவை வைத்து தான் இளம்பெண்களை வலையில் வீழ்த்தி உள்ளார். இளம்பெண்களை ஏமாற்ற ஜெரி என்று தனது பெயரை மாற்றி குறிப்பிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>