மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்குள் தகராறு வாலிபர் பரிதாப சாவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டு கட்டும் பிரிவில் தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த ரமேஷ்(53) என்பவரும், சவக்கிடங்கில் நாகை ஏனங்குடியை சேர்ந்த ரமேஷ்(42) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செப்.27ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஏனங்குடி ரமேசை, கரந்தை ரமேஷ் தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த ஏனங்குடி ரமேஷ், தனது மகன்கள் தியாகராஜன், தீனதயாளன் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு வரவழைத்து பணி முடித்து வீட்டுக்கு புறப்பட்ட கரந்தை ரமேஷை, மருத்துவமனை வளாகத்திலேயே ஏனங்குடி ரமேஷ் தன் மகன்களுடன் சேர்ந்து அடித்து கீழே தள்ளினார்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ஏனங்குடியை சேர்ந்த ரமேஷ்(42) மற்றும் அவரது மகன்கள் தியாகராஜன்(21), தீனதயாளன்(19), ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை கரந்தை ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறையில் உள்ள ஏனங்குடியை சேர்ந்த ரமேஷ்(42) மற்றும் அவரது மகன்கள் தியாகராஜன்(21), தீனதயாளன்(19), ஆகிய மூவர் மீதும் உள்ள கொலை முயற்சி வழக்கை மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>