×

நவராத்திரி விழா பெரியபாளையத்தம்மன் அலங்காரத்தில் வழிபாடு

காஞ்சிபுரம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஸ்ரீபடவேட்டம்மன் ஸ்ரீபெரியபாளையத்தம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீபடவேட்டம்மன் ஆலயத்தில் 43ம் ஆண்டு நவராத்திரி அலங்கார பெருவிழா விமர்சையாக நடந்தது. இதில் தினமும் பல்வேறு அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளிக்கும் படவேட்டம்மன் 4 நாள் பொன்னும் பொருளும் அள்ளித் தரும் ரேணுகா தேவி ஸ்ரீபெரியபாளையத்தம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் அம்பாளுக்கும் தீபாராதனை நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக 108 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜையும் சிறப்பாக நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா கலைநன் மணி எம்.ஜி.வடிவேல், ஆலய பொது நல சங்க தலைவர் டாக்டர் மாஸ்டர் கிருஷ்ணா ஆகியோர் செய்தனர்.


Tags : Navarathri festival ,Periyapalaiyathamman , Worship in Navarathri festival Periyapalaiyathamman attire
× RELATED மானாமதுரையில் நவராத்திரி விழா: பக்தர்களை கவரும் கொலு பொம்மைகள்