உபி.யில் ஆட்சியை பிடித்தால் அயோத்தி ராமர் கோயில் பணியை நிறுத்த மாட்டேன்: மாயாவதி திடீர் அறிவிப்பு

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் 15ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, லக்னோவில் நேற்று இக்கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இக்கட்சியின் தலைவரும், உபி முன்னாள் முதல்வருமான மாயாவதி பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் அயோத்தி, மதுரா, காசியில் தற்போது பாஜ அரசு செய்து வரும் மதம் சார்ந்த பணிகள்  அனைத்தும், எனது ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான்.

உபி. தேர்தலில் வெற்றி பெற்று எனது கட்சி ஆட்சி அமைத்தால், பழிவாங்கும் நோக்கத்தில் இந்த பணிகளை நிறுத்த மாட்டோம். குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்போம். மற்ற ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை முடக்குவது, அவற்றின் பெயர்களை மாற்றும் சமாஜ்வாடி, பாஜ.வின்  நாடகங்களை பகுஜன் சமாஜ் செய்யாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: