லடாக் எல்லையில் புதிய கட்டமைப்புகளை கட்டும் சீனா: ராணுவ தளபதி நரவானே கவலை

புதுடெல்லி: `லடாக் எல்லையில்  புதிய கட்டமைப்புகளை சீனா கட்டி வருவது கவலை தருகிறது,’ என்று ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கருத்தரங்கில் ராணுவ தளபதி நரவானே நேற்று பங்கேற்று ேபசியதாவது: லடாக் எல்லையில் சீனா படைகளை குவிப்பதும், மிகப் பெரிய அளவிலான புதிய கட்டமைப்புகளை கட்டுவதும் கவலை அளிக்கிறது. இதே நிலை நீடித்தால், அப்பகுதிகளில் அதே அளவிலான இந்திய ராணுவப் படைகள் நிறுத்தி வைக்கப்படும்.  சீனாவுக்கு சமமான உள்கட்டமைப்பையும் இந்தியாவும் செய்யும்.  சீனப்படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகள் ராணுவத்தினரின் முழு கண்காணிப்பில் உள்ளன.

2வது குளிர் பருவத்திலும் சீனா படையினரை நிறுத்தினால், கடந்த முறை லடாக்கில் ஏற்பட்ட பதற்றத்தை போன்ற நிலை இம்முறை இப்பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்திய படைகள் தயார் நிலையில் இருப்பதால், அவர்கள் நினைத்த எதுவும் நடக்காது. லடாக் பிரச்னைக்கு பிறகு எல்லைகளில் உளவு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று உணர்ந்து கொண்டதால், கடந்த ஓராண்டில் எதிர்காலத்தை  இந்தியா தனது படை, ஆயுதங்களை மேலும் நவீனமயமாக்கி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமை சீரடைந்தால், தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் காஷ்மீருக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: