ராகுல்-லாலு சந்திப்பால் மீண்டும் கூட்டணியா?.. பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு

பாட்னா: டெல்லி, பாட்னா ஆகிய இரு இடங்களில் தனித்தனி கோஷ்டியாக ராம்விலாஸ் பஸ்வானின் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுலும், லாலுவும் சந்தித்ததால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) நிறுவனருமான மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் முதலாமாண்டு நினைவு தினம் டெல்லியில் கடைபிடிக்கப்பட்டது. ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு யாதவ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இரங்கல் கூட்டத்தில் ராகுலும், லாலுவும் அருகருகே அமர்ந்து இரு தலைவர்களும் சுமார் 15 நிமிடங்கள் பேசினர். இந்த சந்திப்பின் மூலம் பீகார் இடைத்தேர்தல் அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது.

ஆனால், பீகாரில் வரும் 30ம் தேதி தாராபூர் மற்றும் குஷேஸ்வர் ஆகிய இரண்டு ெதாகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. கடந்த பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், சமீபத்தில் இருகட்சிகளுக்கும் இடையே மாநில அளவில் விரிசல் ஏற்பட்டது. அதனால், இரண்டு  கட்சிகளும் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதற்கிடையே, லாலு பிரசாத் யாதவும், ராகுல் காந்தியும் நிகழ்ச்சி ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதால், இருகட்சிகளுக்கு இடையிலான கூட்டணி மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராம் விலாஸ் பஸ்வா

னின் முதலாமாண்டு நினைவு தினத்தை சிராக் பஸ்வான் ஒருபக்கம் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் அதேவேளை, அவரது மாமனான பசுபதி குமார் பராசும் பாட்னாவில் நினைவுநாளை கடைபிடித்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார், கவர்னர் ஃபகு சிங் சவுகான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>