7 பேர் கும்பலால் சிறுமி பலாத்காரம்: காதலன் உட்பட 4 பேர் கைது

நாக்பூர்: நாக்பூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட ஏழு பேரில், 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் புறநகரில் 17 வயது சிறுமி தனது காதலனுடன் கடந்த 2ம் தேதி குறிப்பிட்ட இடத்திற்கு சென்றார். அங்கு, அந்த சிறுமியை காதலன் பாலியல் பலாத்காரம் செய்தான். அடுத்த சில மணி நேரத்தில் காதலனின் நண்பர்கள் மூன்று பேர், அந்த இடத்திற்கு வந்தனர். அவர்களும் அந்த சிறுமியை அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதன்பின், அந்த சிறுமியை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதன்பின், அக். 7ம் தேதி தனது காதலனுடன் அதே இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், சிறுமியையும், காதலனையும் சரிமாரியாக அடித்தனர். பின்னர், அந்த மூன்று பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். கிட்டத்தட்ட 2 நாட்களில் ஏழு ேபரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்திருந்தார்.

அவரது பெற்றோர் விசாரித்ததில், நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாக்பூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், கடந்த 2 மற்றும் 7ம் தேதியில் காதலன் உட்பட ஏழு பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதையடுத்து, காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>