இஷான் கிஷன் மிகவும் திறமையான வீரர்: ரோகித் சர்மா பாராட்டு

அபுதாபி: ஐபிஎல் தொடரில் நேற்று அபுதாபியில் நடந்த 55வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன் குவித்தது. இஷான் கிஷன் 32 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 84, சூர்யகுமார் யாதவ் 40 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 82 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் கேப்டன் மணிஷ் பாண்டே நாட்அவுட்டாக 69 ரன் (41 பந்து) எடுத்தார். இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார். மும்பை வெற்றி பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இதுபற்றி கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், மும்பை போன்ற அணிக்காக விளையாடும்போது எப்போதும் ரன் குவிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதனை நான் அழுத்தம் என்று சொல்லமாட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எதிர்பார்ப்பு.

இதற்கு முன் இங்கு தோல்வியை சந்தித்தாலும் இன்று வெற்றி பெற்றது மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு இன்று சிறந்த பொழுதுபோக்காக இருந்திருக்கும் என நம்புகிறேன். இஷான் கிஷன் மிகவும் திறமையான வீரர். அவருக்கு பிடித்த சூழ்நிலை இது. மறுமுனையில் இருந்து பார்க்க அற்புதமாக இருந்தது. நாங்கள் விரும்பும் விதத்தில் இஷான் பேட் செய்தார். என்றார்.

Related Stories:

More