×

டென்மார்க் பிரதமர் இந்தியாவுக்கு வருகை: பிரதமர் மோடி வரவேற்பு…காந்தி நினைவிடத்தில் மரியாதை..!!


புதுடெல்லி: இந்தியாவுக்கு வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனுடன் பிரதமர் மோடி இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.3 நாள் அரசு முறை பயணமாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார்.விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி வரவேற்றார்.இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனுக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனை வரவேற்றார்.

இதனையடுத்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர்கள் பேச்சு நடத்த உள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரு தலைவர்களின் பேச்சுகளை தொடர்ந்து இந்தியா - டென்மார்க் இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் டென்மார்க் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.  



Tags : Danish ,PM ,India ,Modi ,Gandhi Memorial , பிரதமர் மோடி,டென்மார்க் ,பிரதமர் ,மெட்டே பிரெட்ரிக்சன்
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு