குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்து அகற்றம்-வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

குன்னூர் : குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்து அகற்றப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையியே உள்ள மலை ரயில் பாதையோரம் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள், கற்கள் தண்டவாளத்தில் சரிந்து விழுந்தன. இதனால் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கற்கள், மண்னை அகற்றினர். இப்பணி இரவு வரை தொடர்ந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் நேற்று 2வது நாளாக மீண்டும் ரண்ணிமேடு முதல் ஹில்க்ரோ வரை இடையே ரயில் பாதையில் இருந்த பாறைகள் அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அதில் ராட்சத பாறைகள் அகற்ற முடியததால் அதனை வெடி வைத்து முடிவு செய்தனர். இது குறித்து ரயில்வே மேலாதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பாறை வெடிக்க பயன்படுத்தும் வெடி மருந்துகளை வரவழைத்தனர். பின்னர் பாறை ஒடைக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து ரயில்வே ஊழியர்கள் ராட்சத பாறைகளை வெடி வைத்து அகற்றினர்.

மவன ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள மலை ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதால் வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இது போன்று பாறைகளுக்கு வெடி வைப்பதால் வன விலங்குகள் அதிர்ச்சியில் வன விலங்குகள் உயிரிழக்கின்றன. ரயில்வே துறைக்கு வெடி பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது? இயற்கைக்கு எதிராக மலை ரயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது’’ என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: