திருச்செங்கோட்டில் ₹7 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 150 மூட்டை கொப்பரை ₹7 லட்சத்திற்கு விற்பனையானது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், கொப்பரை ஏலம் நடைபெற்றது. திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 150 மூட்டை கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர்.

இதில், முதல் ரகம் ₹91.75 முதல் ₹101.90 வரையிலும், 2ம் ரகம் ₹65.75 முதல் ₹86.10 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் 150 மூட்டை கொப்பரை ₹7 லட்சத்திற்கு ஏலம்போனது. ரகசிய டெண்டர் மூலம் விற்பனை செய்யப்படுவதால்,  அதிக விலை கிடைப்பதாக சங்க தலைவர் திருமூர்த்தி, மேலாண் இயக்குனர் விஜயசக்தி ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories:

More
>