குளச்சாலையில் ஆடுகளை வதை செய்ய வேண்டும் -சின்னாளபட்டி செயல்அலுவலர் உத்தரவு

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில்  திருநகர், பூஞ்சோலை, பஸ் நிலையம், காமராஜர் சாலை, தேவாங்கர் பள்ளி சாலை,  மேட்டுப்பட்டி உட்பட பல இடங்களில் 35க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள்  உள்ளன. ஆரம்பத்தில் அண்ணா தினசரி மார்க்கெட்டில் மட்டும் கறிக்கடைகள்  செயல்பட்ட போது அருகில் உள்ள குளச்சாலையில் ஆடுகளை வதை செய்து வந்தனர்.  தற்போது நகர் விரிவாக்கம் அடையவே கடைகள் பெருகி விட்டன. இதனால் ஆடுகளை  குளச்சாலையில் வதை செய்து கடைக்கு கொண்டு செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு  வந்தது.

இதன் காரணமாக அந்தந்த பகுதியிலே ஆடுகளை வதை செய்து வந்தனர் இதனை  பார்வையிட்ட செயல் அலுவலர் பிரகந்தநாயகி, உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர்  சாதிக் ஆகியோர் கறிக்கடை உரிமையாளர் சங்கத்தினரை பேரூராட்சி அலுவலகத்திற்கு  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செயல்அலுவலர், குளச்சாலையில் மட்டும்தான் ஆடுகளை வதை செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு கறிக்கடைக்காரர்கள், குளச்சாலையில் போதிய வசதி  இல்லாததால் அதிகளவில் ஆடுகளை அடிக்க முடியாத நிலையில் உள்ளது.  முறையாக கட்டிட வசதி செய்து கொடுத்தால் நாங்கள் குளச்சாலையில் ஆடுகளை வதை செய்வோம் என தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தனர். இதில் துப்புரவு ஆய்வாளர் கணேசன், மேற்பார்வையாளர் தங்கதுரை  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

More
>