×

ஒரே வாரத்திற்குள் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சேவைகள் 2வது முறையாக முடங்கியது : 5 மணி நேரம் பயனாளர்கள் தவிப்பு!!

சென்னை : ஒரே வாரத்திற்குள் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சேவைகள் 2வது முறை முடங்கியதால் அந்த நிறுவனம் மீண்டும் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் 7 மணி நேரமாக முற்றிலும் முடங்கின. உலகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு அது பேசும் பொருளான நிலையில், பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியது. இதனால் 52,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க், உலக பணக்கார பட்டியலிலும் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

அந்த பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், மீண்டும் சர்வர் முடக்கத்தை பேஸ்புக் நிறுவனம் சந்தித்துள்ளது. ஆனால் இந்த முறை பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் மட்டுமே முடங்கின. அதுவும் குறிப்பிட்ட பயனாளர்களே இந்த பிரச்னையை சந்தித்ததாக தெரிவித்த பேஸ்புக் நிறுவனம், மீண்டும் மன்னிப்பு கோரியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் ஏற்பட்ட பிரச்சனை அதிகாலை 3 மணி அளவில் சரி செய்யப்பட்டது.


Tags : பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம்
× RELATED வேலைக்காக வெளிநாடு செல்லும்...