டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ்

துபாய்: டெல்லி அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச... டெல்லி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் பிரித்வி 48 ரன், தவான் 43 ரன் விளாசினர். கேப்டன் பன்ட் 10, ஷ்ரேயாஸ் அய்யர் 18, ஹெட்மயர் 29 ரன் எடுத்தனர்.

பெங்களூர் பந்து வீச்சில் சிராஜ் 2, சாஹல், ஹர்ஷல், கிறிஸ்டியன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் விளாசி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஷிகர் பரத் அதிகபட்சமாக 78 ரன் (52 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். மேக்ஸ்வெல் 51 ரன், டிவில்லியர்ஸ் 26 ரன் எடுத்தனர். டெல்லி பந்து வீச்சில் நார்ட்ஜே 2 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories:

More
>